பன்னாட்டு தமிழர்கள் பங்கேற்ற 6-ஆம் ஆண்டு உலகத்தமிழர் வம்சாவளி மாநாடு

6-ஆம் ஆண்டு உலகத்தமிழர் திருநாள் விழா மற்றும் உலகத் தமிழ் வம்சாவளி ஒன்று கூடல் எடிசன் திரை விருதுகள் சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஜனவரி 11 மற்றும் 12-ம் திகதிகளில் நடைபெற்றது. அவ்விழாவில் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கலந்து கொண்டார். விழா தொடக்கத்தில் கேரளா முன்னாள் ஆளுநர் உச்ச நீதிமன்ற நீதியரசர் ஓய்வு P. சதாசிவம் அவர்களால் துவக்கி வைக்க, இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் க.வி விக்னேஷ்வரன், பப்பாகினியா மத்திய அமைச்சர் முத்துவேல் சசிதரன், மலேசிய முன்னாள் அமைச்சர் கமலநாதன், காமாட்சி துரைராஜ் சட்டமன்ற உறுப்பினர், விஐடி வேந்தர் விஷ்வநா தன் உலகத்தமிழ் வம்சாவளி அமைப்பின் தலைவர் ஜெ. செல்வகுமார் சிறப்புறை ஆற்றினர்.

இவ்விழாவில் அயல் நாட்டில் சமுக சேவை புரிந்தவர்களுக்கு, கனடாவின் ஷான் தயாபரன்,வணக்கம் மலேசியாடாட்காம் தியகா, பிரேமா விஜயகுமார், தமிழ் மொழியை மாற்று ஊடகம் மூலம் செயல்படுத்திய ஹிப்ஹாப் தமிழா ஆதி, வணிகத்துறைக்கு சேவை செய்து வரும் மதுரை ஜெகதீசன். மருத்துவதுறையில் டாக்டர் கீதாலட்சுமி ஆகியோர்க்கு விருதும், கனடா இளம் சிறார்கள் பேச்சு போட்டியில் சிறந்து விளங்கிய கம்சாயினி சாந்தகுமார் ஜஸ்மிதா சிவரூபன் ஆகியோர்க்கும் மேடையில் கெளரவிக்கப்பட்டனர். மேலும் இவ்விழாவில் தமிழக மற்றும் அயலக தமிழ் மாணவர்கள், மயிலாட்டம், ஒயிலாட்டம், பரதம், சிலம்பம் போன்ற தமிழ் மரபு சார்ந்த கலை நிகழ்வும், தமிழ் பேச்சு மொழியை ஊக்குவிக்கும் விதமாக சொற்போர் என்ற நிகழ்வு நடைபெற்றது அதில் தமிழை வளர்ப்பது தாயகத்தமிழர்களா...? அயலக தமிழர்களா...? என்ற தலைப்பில் நடைபெற்றது.

இவ்விழாவின் முக்கிய நிகழ்வாக உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பின் சிறப்பினை விளக்கும் வகையில் கவிஞர் ரவி பாரதியின் வரிகளில், திரு டிரோன் பெர்னாண்டோ இசை அமைத்து, திரு ஷமீல் பாடிய சிறப்பு பாடல் ஒன்று வெளியிடப்பட்டது.

பல்வேறு அம்சங்களை கொண்ட எடிசன் திரை விருதுகள் நடைபெற்றது அந்நிகழ்வில் தமிழ் திரையுலக முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்று விருதுகளை பெற்று கொண்டார்கள். இவ்விழாவை உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பும், எடிசன் திரைவிருதுகள் குழுவும் மிக சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.